Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 17, 2018

என் வாழ்க்கை...........!!!! பாரதி மைந்தன்

Currently online
கண்கள் சிந்துகின்றது கண்ணீர் மழையினையே 
வாழ்வின் நிலையை எண்ணியே தினம் 
கழிகின்ற காலம் எல்லாம் என்னை 
வேதனையில் தினம் வாட்டி வதைக்கிறதே

சாதிக்க எண்ணியே பாடசாலை சென்றேன் 
சின்னச் சிட்டாகவே அன்று நான் 
காலங்கள் தினம் ஓடிச் சென்றதுவே 
சாதனையின் உச்சியிலே நின்றேன் நானும் 
என்னுடைய ஆசான்களின் அன்பினாலே என்றும்

பொறாமை எனும் ஆயுதம் கொண்டே
தாக்கியது சில நட்பு வட்டாரங்கள் 
உடைந்தது என் இலட்சிய கனவு 
மகிழ்ந்தது அழிக்க எண்ணிய வட்டாரமும்

வினை கொண்டு தாக்கிய கூட்டம் 
என் வீழ்ச்சியிலே தினம் மகிழ்ந்ததுவே 
என் மனமும் வேதனையில் வாடியதே 
யார் அறிவார் என் நிலையை

இன்றும் கண்ணீரில் தினம் வாடுகின்றேன் 
என் பாடசாலை வாழ்வை எண்ணியே 
என்ன வாழ்க்கை என்று எண்ணியே 
தொடரும் வாழ்க்கையிலே இன்றும் தொடர்கின்றது 
பல்வேறு தடைகள் என்னை அழிக்கவே 
ஆனாலும் தொடருகின்றேன் என் வாழ்வை 
கவியின் பயணத்துடனே தடைகளை தாண்டி

என் வாழ்க்கை கண்ணீரில் தினம் 
என்னை என்றும் வாட்டி போடுகின்றது 
ஆனாலும் மகிழ்கின்றேன் சில உறவுகளால்

என் பயணம் தினம் தொடரும்
கண்ணீரில் மனம் நனைந்து வாழ
முகம் மட்டும் சிரித்து வாழும் 
அது போதும் எனக்கு வாழ்வில் 
என்னால் மகிழட்டும் உன் உறவுகளும்

      நன்றி 
பாரதி மைந்தன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.