Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 05, 2018

பேரூந்து - பேயுந்து! - செந்தூரன் மீரா!

Currently online
ஏழை ரதம் என்றும்
ஏற்றிச் செல்லும் பேரூந்தே. . 
என்று தீரும் எங்கள் சோகம்.

கடலாடும் நுறைகூட
கடல் திரும்புமே. . 
கண்டபடி நெருக்கம்
கவலை சூழுமே. .

ஏனிந்த அவசரம்
ஏழை சாதியே. . 
எளியதாய் போனதோ. .
எங்கும் உயிரே. .

பயணச்சீட்டு பெறுவது
பரலோகம் போவதற்கோ
பாவியரே செவிமடுப்பீர். .

தடுமாறி வீழ்ந்தால் உம்
தலை தப்புமா
தறிகெட்டு ஏறுவதுமேனோ. .

குறிப்பிட்ட நேரங்களில்
கூட்ட நெரிசல் - அதிகம்
கிடைக்காதோ பேரூந்து பரிசல். .

அரசாங்கமே எம் அவல நிலை
அறிந்தும் ஏன் இரக்கமில்லை. 
அடுத்தடுத்து பேரூந்து வந்த பாடில்லை.

நெருக்கடியின் மத்தியில்
நெடியின் வாசம்
நெஞ்சம் வரை பாய்கிறதே.

வாசம் என்ற உடலை 
வக்கனையாய் மறந்து விட்டு
விரும்பி அழைப்பதுவோ சாவை நீவீர்

தடுமாறி வீழ்ந்திட்ட
தாயைக் கூட 
தன் கரம் கொண்டு தூக்காத
தற்குறி மானிடமே. .

நேரம் பார்த்து நீயும் வந்து
நேசமுடன் பயணித்தால்
நெடுந்தூரமும் இலகுவாய்ப் போகும்.

படியினிலே நீயும் 
பறவைச் சிறகு போல் 
பறந்து செல்வது ஏனடா. .

எங்கு போய் முறையிட
எங்கள் அவல நிலை
என்று புரியுமோ உயிரின் விலை. .

                                         நன்றி 
                                 செந்தூரன் மீரா (முகநூலில் இருந்து)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.