Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்த இரு யுவதிகள் !!!

Currently online
புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து யுவதிகள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கம்பஹா தரலுவ பகுதியில் நேற்றிரவு  இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது 

குறித்த சம்பவத்தில் புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும் நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தற்கொலை செய்துக்கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு, ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இரு யுவதிகளும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது.

யுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் .பணிபுரியும் இடத்தில் இருவருக்கும் பாலியல் தொல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா அல்லது, இவர்களுக்கு வேறு இளைஞர்களால் ஏதேனும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் காவல் துறையினர்  சந்தேகத்துடன்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.