Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 06, 2018

தாவணிக்காலக் கனவுகள்............!!!!!! பாரதி மைந்தன்

Currently online
ராசத்தி உன்னை எண்ணி 

மாமன் மனம் துடிக்கையிலே 
ரோசாப்பூ அழகி நீயும் 
சொக்க வைக்கும் அழகினிலே 
பார்க்காம போனதேனோ சொல்லடி ராசத்தி


சின்னவளே தாவணி நீ உடுத்தி
வயல் பக்கம் போகையிலே 
உன் அழகில் நான் மயங்க
என்னை களவாடி போறவளே


சொக்க வைக்கும் உன் பேச்சை
நித்தம் நானும் கேட்டிடவே 
தினம் பாவி மனம் ஏங்குதடி 
மாமன் மனம் குளிரவேன 
காதல் செய்தி சொல்லிடுவாய்


கண்ணுக்குள்ள உன்னை வச்சு 
நித்தம் நான் நினைக்கையிலே 
பாவி மனம் துடிக்குதடி உன்னை எண்ணி


முறை மாமன் நான் உனக்காய்
மாலையுடன் காத்திருக்கன்
வந்திடுவாய் என் ராசத்தி 
அன்புடனே மாமன் கை சேர

        நன்றி 


பாரதி மைந்தன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.