Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை!

Currently online
முன்னேற்றமடைந்து வரும் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை இலங்கையில் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் கொள்கை அபிவிருத்தி அலுவலகம்  ஊடக அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

அதில் இலங்கை சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்யும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் முன்னேற்றமடைந்து வரும் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையை தரநிலைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சும் பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகமும் (PDO) ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

எனவே இந்த வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறைப் பங்குதாரர்களின் உதவியுடன் தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை (NAITA), மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு (TVEC), இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM) என்பவற்றின் கீழுள்ள துணிவு மிகு தொழில்களுக்கெனத் தேசிய தகுதி தரநிலைச் சான்று (NCS) மற்றும் தேசிய பாடத்திட்டங்கள் (NVQ Level  4) தயாரிக்கப்பட்டுள்ளன.

இதில் துடுப்புப் படகு இயக்குபவர், தனிப்பட்ட படகு இயக்குபவர், மலையேற்றம்/ நடைபயண வழிகாட்டி (Trekking/ Hiking Guide), தரைக் கட்டுப்பாட்டு முகவர் (Ground Control Agent), பாரசூட் பராமரிப்பாளர் (Parachute Rigger) போன்ற துறையினர் அடங்குவர்.

இந்தப் புதிய பாடத்திட்டங்களின் கீழ் முதலாவது குழுவினராக மலையேற்றம்/ நடை பயண வழிகாட்டி மற்றும் பாரசூட் பராமரிப்பாளர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2018 ஜூலை மாத இறுதியில் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

அதேபோன்று பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகம் இந்த விடயம் தொடர்பாக ஆர்வங் காட்டும் அனைத்துத் தரப்பினரையும் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தில் பதிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கிறது.

அதேபோன்று பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கொள்கை அபிவிருத்தி அலுவலகத்தினால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்துடன் சாகச சுற்றுலாக் கைத்தொழில் பங்குதாரர்களின் முழுமையான பங்கேற்புடன் ஆலோசனைக் குழுவொன்றை உருவாக்குவதற்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.

மேலும் சாகச சுற்றுலாக் கைத்தொழில் துறையைக் கண்காணித்தல், தரநிலைப்படுத்தல், விரிவுபடுத்தல் மற்றும் சாகச சுற்றுலாக் கைத்தொழில் பங்குதாரர்களின் திறன்கள் மற்றும் அறிவினை விருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்வது அதன் நோக்கமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.