Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 19, 2018

விராட்கோலி முதலிடத்தில் ; எதில் தெரியுமா ???

Currently online
ஒருநாள் கிரிக்கெட் போட்டி அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்ற இங்கிலாந்து அணி (127 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (121 புள்ளிகள்) 2–வது இடத்தில் தொடருகிறது. தென்ஆப்பிரிக்கா (113 புள்ளிகள்) 3–வது இடமும், நியூசிலாந்து (112 புள்ளிகள்) 4–வது இடமும், பாகிஸ்தான் (103 புள்ளிகள்) 5–வது இடமும், ஆஸ்திரேலியா (100 புள்ளிகள்) 6–வது இடமும், வங்காளதேசம் (93 புள்ளிகள்) 7–வது இடமும் வகிக்கின்றன.

பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி (911 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவுக்கு எதிரான போட்டி தொடரில் 2 சதங்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் ஜோரூட் (818 புள்ளிகள்) 4 இடம் முன்னேறி முதல்முறையாக 2–வது இடத்தை பிடித்துள்ளார். பாபர் அசாம் (பாகிஸ்தான்), ரோகித் சர்மா (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா), ராஸ் டெய்லர் (நியூசிலாந்து) ஆகியோர் ஒரு இடம் சரிந்து முறையே 3 முதல் 6 இடங்களை பெற்றுள்ளனர். இந்திய வீரர் ஷிகர் தவான் 10–வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (775 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் (763 புள்ளிகள்) 2–வது இடமும், பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி (750 புள்ளிகள்) 3–வது இடமும், நியூசிலாந்து வீரர் டிரென்ட் பவுல்ட் (699 புள்ளிகள்) 4–வது இடமும், ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் (696 புள்ளிகள்) 5–வது இடமும் வகிக்கின்றனர். இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் (684 புள்ளிகள்) 6–வது இடத்தையும், யுஸ்வேந்திர சாஹல் (666 புள்ளிகள்) 10–வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஆல்–ரவுண்டர் தரவரிசையில் வங்காளதேச வீரர் ‌ஷகிப் அல்–ஹசன் (360 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.