Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

ஒரே நாளில் வெளியாகிறது கமல், நயன்தாரா படங்கள் !!

Currently online
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்–2’ படம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10ஆம் திகதி திரைக்கு வருகிறது.

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படமும் அதே நாளில்  வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஒரே நாளில் இருவர் படங்களும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

விஸ்வரூபம்–2 படத்தை கமல்ஹாசனே டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்துள்ளார். பூஜா குமார், ஆண்ட்ரியா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ராகுல்போஸ், சேகர் கபூர் ஆகியோரும் உள்ளனர். இது விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். 

கோலமாவு கோகிலா படத்தில் கதாநாயகன் இல்லை. நயன்தாரா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ளனர். நெல்சன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குடும்ப வறுமையை போக்க போதை மருந்து கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரை ஒருதலையாக காதலிப்பவராக யோகிபாபு வருகிறார். நகைச்சுவை, திரில்லர் படமாக உருவாகி உள்ளது. 

போதை மருந்து வி‌ஷயம் இருப்பதால் படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்து ‘யுஏ’ சான்று அளித்து இருக்கிறார்கள்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.