Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 10, 2018

ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் நால்வர் சுன்னாக பொலிஸாரால் கைது!

Currently online
யாழில்  வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியிருந்த ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் நால்வர்  சுன்னாக  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே  இரவில் 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு உறுப்பினர்கள்  வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றமை, அதற்கு அடுத்த நாள் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தமையின் அடிப்படையில் இடம்பெற்ற தேடுதலில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாகலிங்கம் தயாகரன் (28 வயது), பஞ்சலிங்கம் கிருஷன் (20 வயது), சுதாகரன் தவரூபன் (22 வயது),  நடராஜா மதுஷன் (23 வயது)  என இனம்காணப்பட்டுள்ளனர்.

இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.