Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

மன்னாரில் தொடரும் மர்மம் : அகழ்வுப்பணியில் அதிகரிக்கும் மனித எலும்புக்கூடுகள் !!!

Currently online
32 ஆவது நாளாக  மன்னாரில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி தொடர்கின்றது. தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இது வரை 23 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் 37 எலும்பு கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை 32 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு ஏற்கனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் ஓரு அளவிற்கு முடிவடைகின்ற நிலையை எட்டியுள்ளது.

மேலும் தற்போது அகழ்வில் இருந்து மீட்கப்படும் மனித எலும்புக்கூடுகள் சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.