Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

அவளும் நானும்...............!!!!! மிதன் சோபி

Currently online
உன்முகத்தில் பூரண நிலவின்
பொங்கும் எழிலும் குளிர்ச்சியும்
காண்கின்றேன் நான் கண்ணே என்றேன்

எந்தன் சந்திர முகத்திற்கு
ஒளி தரும் ஆதவன் அல்லவோ
என் அன்பே நீ என்றாள் அவள்

ஆழ்கடலில் மூழ்கி தேடி எடுத்த
நல்முத்தடி நீயடி என்னவளே என்றேன்
அன்பே அந்த ஆழ்கடலில் நான்
கண்டெடுத்த நல்பவளம் நீ, என்றாள்

என்னவளே நீயேதான் எல்லாம்
எனக்கு கேளடி என் இதயமே
அதை சொல்லும் என்றேன்

அன்பே என் நாடிதுடிப்பே
நீதான் நீ தான் என்றாள் அவள்

இப்படியே இந்நினைவில்
நம் உறவு நிலைத்திருக்க வேண்டுமடி
என்றேன் அதில் எனக்கு சந்தேகம் ஏது
அந்த உறவின் இயக்கம் நீதானே நீதானே என்றாள்

     நன்றி
மிதன் சோபி


jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.