Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

தொண்டர் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி !!!

Currently online
457 தொண்டர் ஆசிரியர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  உரிய தகைமைகளை பூர்த்தி செய்துள்ள ஆசிரியர்களுக்கு மாத்திரமே எதிர்வரும் 22ஆம் திகதி நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்
இடம்பெறவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்கள் மற்றும் தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகளும் கவனத்திற் கொள்ளப்படவுள்ளதாகவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியமனங்கள் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.