Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடை வவுச்சர் ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின் !!!

Currently online
ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின்னர்  அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடையை வழங்குவதற்கு தேவையான வவுச்சர் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த வவுச்சர் நடைமுறை கடந்த முறையைப் போன்று இம்முறையும்  முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இதற்குத் தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்துள்ளார்.

மேலும்  43 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கும், பிரிவெனாக்களில் கல்வி பயில்வோருக்கும் தேவையான துணி வகைகளுக்கும் தேவையான பண வவுச்சர் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான நிதி அரசாங்கத்தினால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.