Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

காந்த குரலோடும், வசீகரிக்கும் பார்வையோடும் கருணாநிதி மக்களை சந்திப்பார் ; வைகோ நம்பிக்கை !!

Currently online
திமுக தலைவர் கருணாநிதி மிக நலமுடன் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் ’ என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

இதனால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்து அவருடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர். திமுக தொண்டர்களும் தொடர்ந்து அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

அதன்பின் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஆருயிர் அண்ணன் கருணாநிதி நலமாக இருக்கிறார். ட்ரக்யோஸ்டமி குழாய் பொருத்தப்பட்டிருப்பதால் சில வேளைகளில் காய்ச்சல் வந்து நீங்கும். அதனை குணப்படுத்தும் வகையில் மருத்துவர்கள் தக்க சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கருணாநிதி மிக நலமாக இருப்பதாக ஸ்டாலின் கூறினார். அவர் முழுமையான நலம் பெற்று மீண்டும் அதே காந்த குரலோடும், வசீகரிக்கும் பார்வையோடும் மக்களை சந்திக்கின்ற நிலையை இயற்கை அன்னை ஏற்படுத்தி தருவாள் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என வைகோ தெரிவித்துள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.