Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

ஆளில்லா விமானங்கள் காவிரிக் கரைகளின் கண்காணிப்புப் பணியில்!

Currently online
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு காவிரியின் கரைகளில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன் கூட்டியே ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

இதனை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவின் உதவியுடன் பேரிடர் மேலாண்மைக் குழு செய்து வருகிறது. காவிரி வந்து இறுதியாக கடலுடன் சங்கமிக்கும் இடம் அமைந்துள்ள நாகை மாவட்டத்தில் நான்கு இடங்களில் இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. 

அதில் ஓர் இடமாக மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம் பந்தல் என்ற இடத்தில் ஆளில்லா விமானக் கண்காணிப்பு பணியைத் தொடங்கி வைத்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவன்,

பேரிடர் காலத்தின் போது காவிரி வடிநில கோட்டப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக காவிரி ஆற்றங்கரைகள் உறுதியாக இருக்கிறதா, எந்தெந்த இடங்கள் பலவீனமாக உள்ளன என்பதைக் கண்காணித்து புகைப்படம் எடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவினர் ஆளில்லா விமானங்களை மயிலாடுதுறை பகுதியில் இரண்டு இடங்களில் இயக்குகின்றனர். 

மேலும் இந்த விமானத்தின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை கொண்டு வரைபடம் தயாரிக்கப்பட்டு காவிரிக்கரையின் பலவீனமான பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சரி செய்யப்படும் எனத்தெரிவித்திருந்தார்.

இதன் ஒருங்கிணைப்பாளர் வேலன் கூறுகையில் தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை போன்ற பல மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக ஆளில்லா விமானங்கள் மூலம் பார்வையிட்டுப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளில் இப்பணியைத் தொடங்கியுள்ளோம் எனக்குறிப்பிட்டுள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.