Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 18, 2018

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை !!!

Currently online
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் உரை தொடர்பில் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள குற்றப் புலனாய்வு பிரிவினர், யாழ் பொலிஸ் நிலையத்தில் வைத்து விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பலரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முதல் கட்டமாக விஜயகலா மகேஸ்வரனின் நிகழ்வில் கலந்துகொண்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அரச உத்தியோகத்தர்களையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.