Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 28, 2018

இலங்கையில் அதிகரித்து வரும் தொண்டை புற்றுநோய்;மக்களுக்கு எச்சரிக்கை!

Currently online
இலங்கையில் வாய் மற்றும் தொண்டை சம்மந்தமான புற்று நோய் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே வாய் மற்றும் தொண்டை சம்மந்தமாக மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மாதத்தில் ஒரு தடவையேனும் கண்ணாடிக்கு முன் சென்று வாயை சுயமாக பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் வெள்ளை மற்றும் சிவப்பு நிற வாய் புற்று நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும் என புற்றுநோய் ஒழிப்பு செயற்றிடத்தின் நிபுணர் டொக்டர் பிரசன்ன ஜயசேகர தெரிவித்தார்.

“ஐந்தாண்டுகளில் இந்த அளவை குறைப்பது அவசியமாகும். முன் கூட்டியே அறிந்து கொள்வதன் மூலம் வாய் புற்றுநோயை குணமாக்க முடியும். வெற்றிலை, புகையிலை என்பன வாய் மற்றும் கழுத்து புற்று நோய்கான பிரதான காரணங்களாகும். இவ்வாறான நோயாளர்களுக்கு சிசிக்சை வழங்குவதற்கு வருடாந்தம் 13 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவாகிறது” என்றார்.

மேலும் வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் வாயில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற மச்சம் உருவாவதாகவும் உடனடியாக சிகிச்சை வழங்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பற் சிகிச்சை பீட பேராசிரியர் ருவன் ஜயசிங்க கூறினார்.

அத்துடன் வாய்ப் புற்றுநோயினால் நாளாந்தம் மூன்று பேர் மரணிக்கிறார்கள் எனவும் நாட்டில் நாளாந்தம் ஏழு வாய் புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள் எனவும் சுகாதார ஊக்குவிப்பு பணியத்தின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிகவடன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.