Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 09, 2018

வவுனியாவில் வாள்கள், கோடாரிகளுடன் ஊரையே மிரட்டும் இளைஞர்கள் !!!

Currently online
வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல்களில் காய மடைந்த 7பேர் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

போதையில் நடைபெற்ற தாக்குதல்களில் இவர்கள் வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தாண்டிக்குளத்தில் உந்துருளியில் சென்ற இளைஞர்கள், வீதியில் நின்றிருந்த இளைஞர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த  சம்பவத்தில்  இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். இது தொடர்பில் பூந்தோட்டம், பெரியார்குளம், தோணிக்கல் பகுதிகளைச் சேர்ந்த 10 இளைஞர்களை சந்தேகத்தில் வவுனியா குற்றத் தடுப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து வாள், கோடாரி மற்றும் 3 உந்துருளிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இதேபோன்று மாவட்டத்தின் வேறு பகுதிகளிலும் மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.