Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

கற்பனையில் ஒரு கனவுப்பிரதி! - வன்னியூர் கிறுக்கன்!

Currently online
சற்றுப் பொறுங்கள்
அமைதியாகிறேன்
என் எழுத்துக்களை
பிச்சைக்காரனிடம்
விற்றிருக்கிறேன்


நானும் பிச்சைக்காரன்
எனும் கோப்புக்குள்ளானவனாய்
எனக்கு கவிதை
எழுத தெரியவில்லை
இதுவரை அப்படியேதும்
எழுதவும் இல்லை

நான் கிறுக்கிக்கொண்டிருக்கிறேன்
ஏதோ ஒருநாள் எழுதுவேன்
என்ற நம்பிக்கையில்
என்னை நீங்கள்
வெறுத்து நடக்கையில் தான்
புரிந்து கொண்டேன்

நான் கிறுக்குவதும்
சிலருக்கு பிச்சை போலென்று
எனக்குள் இருந்தோடும்
வலிக் குருதியினை
எவரும் எளிதில்
புரிந்திடப் போவதில்லை

இந்தப் பிரபஞ்சத்தில்
பீறிட்டெழும் ஒரு
சக்தியின் ஊடாகவே
நான் இயங்கிவருகிறேன்

நான் தவறி விழுந்த விதை
எனக்கு நீருற்றியவர்
எவருமே இல்லை
நானே எனக்கு நீரூற்றியதை
நீங்கள் அறியவும் இல்லை

சிலரை உருவாக்கியதாகவே
உணர்வுகள் கூறியும்
அதை ஏற்க மறுக்குகின்றேன்
நான் பிச்சைக்காரன்

தோல்விகளை தொடராக்கியும்
என் ஆன்மா இறப்பை
வேண்டி நிற்கின்றது
சற்றுப் பொறுங்கள்
நான் குழந்தை பெற வேண்டும்

கதவுடைத்து வெளி வந்த காற்று
எனும் குழந்தையின் பெயரில்
நான் பிறப்புக் குறிப்பு
எழுதப் போவதில்லை
எனக்காக யாரோ என்
குழந்தையை வளர்ப்பார்கள்

எனும் நம்பிக்கையின் மூச்சில்
நான் பேச்சிழக்கவும் தயார்
நான் புறக்கணிக்கப்பட்டவன்
ஆமாம் அந்த உண்மையை
உங்களிடம் வைத்திருக்கிறேன்

நீங்கள் என் வரிகளை
படிக்கையில் புரிவீர்கள்
இவன் இச் சமூகத்தில்
கதறித் துடித்த தாய்மையுடையோன்
தோல்வியோடு வாழ்பவன்
வலிகளை செதுக்குபவன் என்று

நான் இத்தோடு
என் தமிழ்க் காதலை
விட்டுவிட எண்ணுகின்றேன்
நிச்சயமாக நீங்கள்
பிரகாசிக்கும் புகழ்களை
ஓர் மூளையில் இருந்து ரசிப்பேன்

என் ஈழ மண்ணில்
புகழோடு வாழும் பலருண்டு
அன்போடும் பணிவோடும்
பெருமையின்றி எழுதினேன்
எனும் சான்றை மட்டுமே
நான் வைத்திருக்கிறேன்

இது போதும் எனக்கு
நான் விடை பெறுகிறேன்
தோல்விகளின் மகன்
வன்னியூர் கிறுக்கனாய்
இது கற்பனைக் கனவு
என்று கூறினால்
ஏற்க மறுத்துவிடுகிறார்கள்

கற்பனையிலும் சில
கருக்கள் உருவாகின்றன
இதற்கு நான் ஒரு உதாரணம்
என்பதை இன்று
புரிந்திருப்பீர்கள் காரணம்

நான் வயது சென்ற
முதியவனாய் இருக்கிறேன்
முடிகளும் நரைத்து
தசைகளும் சுருங்கி விட்டன..

                                   நன்றி
                  வன்னியூர் கிறுக்கன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.