Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

வரணியில் இறுதிச்சடங்கு நிகழ்வின் போது வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்தது!

Currently online
யாழ்.தென்மராட்சி வரணிப் பகுதியில் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே திடீரென ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.  

நேற்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் வரணி வடக்குப் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் கஜன்(27), சவுந்தராஜ் ராஜ்மிலன்(29), கந்தசாமி சுரேஷ்குமார்(31), கிட்டினன் தங்கலிங்கம்(45), கணபதி நவரத்தினம்(52) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவார்கள்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வரணி வடக்கிலுள்ள கிராமமொன்றில் நேற்றைய தினம் இறுதிச் சடங்கு நிகழ்வொன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சிலரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாம பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.