Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

எக்லெஸ் சாக்லேட் கேக் செய்ய ரெடியா ??

Currently online
தேவையான பொருட்கள்:

கோதுமை மா (மைதா) - 1 1/2 கப்
சீனி - 3/4 கப்
பால் - 1 கப் (அல்லது பால் 3/4 கப் தண்ணீர் 1/4 கப் சேர்த்து)
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பொடித்த கஜு - 1/4 கப் (விரும்பினால்)
ரெய்சின் - 25 (விரும்பினால்)
பட்டர் - 1/2கப்
பேகிங் சோடா - 1 1/2தேக்கரண்டி
உப்பு - 1/4 டீஸ்பூன்
8" கேக் பான் - 1
பேகிங் ஸ்பிரே

செய்முறை :

கோதுமை மா, கொக்கோ பவுடர், உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 - 4 தடவை அரிக்கவும் (சலிக்கவும்).சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.

பின்னர் அத்துடன் பாலை சேர்த்து நன்கு அடிக்கவும். பால் குளிராக இருந்தால் சிறிது சூடாக்கி பின்னர் பயன்படுத்தவும்.பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்) பின்னர் பொடித்த கஜு, ரெய்சின் சேர்த்து கலக்கவும்.

கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும். அவனை 350 F இல் முன்சூடு பண்ணவும். பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 F இல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.முட்டை இல்லாமல் தயாரிக்கப்பட்ட சுவையான சாக்லெட் கேக் தயார். விரும்பினால் சாக்லெட் ஐஸிங் பூசி அலங்கரித்து கொள்ளலாம்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.