Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

இது விட்டு விடுதலுக்கான காலம்.......!!!!!(ரிஸ்கா முக்தர்)

Currently online
நேசத்தின் சுவர்களை யாரோ 
தகர்க்கிறார்கள்;
நடுங்கும் கரங்களில்
இன்னும் ஏன் நீ
ப்ரியத்தின் ஒரு மலரை 
ஏந்திக்கொண்டிருக்கிறாய்...?

பேரன்பின் கானகத்தில் 
யாரோ 
தீ மூட்டுகிறார்கள்;
கலங்கிய கண்களோடு 
இன்னும் ஏன் நீ
ப்ரியத்தின் சிறு மழைக்காய் 
பிரார்த்தித்து கொண்டிருக்கிறாய்..?

கருணையின் கதவுகளை 
யாரோ 
அடித்து சாத்துகிறார்கள்;
கெஞ்சல் மொழிகளோடு
இன்னும் ஏன் நீ
ப்ரியத்தின் ஒரு முத்தத்திற்காய் 
மண்டியிடுகிறாய்..?

இப்போது நீ
கண் கலங்குவதாலோ
மண்டியிடுவதாலோ
எதுவொன்றும் மாறிடப்போவதில்லை.....

இது விலகுதலுக்கான காலம்
இது விட்டு விடுதலுக்கான காலம்!

ஆதலால் 
விட்டு விடு....!

நேசத்தின் சுவர்கள் 
இடிந்து மண்ணாய் போகட்டும்....

பேரன்பின் கானகம் 
எரிந்து சாம்பலாகட்டும்....

கருணையின் கதவுகள் ஒரேடியாய் 
இறுக மூடிக் கொள்ளட்டும்......

இனி
அந்தியின் நிழல்கள்
உனை 
பின் தொடர்வதற்குள்
விட்டு விலகி
எங்காவது 
செல் 
மனமே!!!




நன்றி 
(ரிஸ்கா முக்தர்)  
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.