Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Thursday, July 12, 2018

கூட்டுச் சதியால் நிலையிழந்த நாடு............!!!! முனைக்காடான் குபேந்திரன்

Currently online
சீர் பெற்ற சிறந்து
நித்திலம் வளம் கொழித்த
மத்தளம் பறை கொட்ட _ எங்கள்
முத்தமிழ் வளர்த்த நாடே.!

முப்படை பல கண்டு
முகவுரைப் பலம் தந்து
பகலவன் படை நடத்தி
பகைதனை வென்ற நாடே.!

காடுடை நிலமும் 
கடலுடன் களனியும்
பனைமரக்காடும் பயன்பெறும் 
சோலை நில நாடே..!

முத்தமிழ் புகழ் பாடி
தமிழதை உணர்வேற்றி 
சணத்திடம் திறல் வளர்த்து
சிறப்புடன் உயர்ந்த நாடே.!

பகைநிலப் பரப்பில் உயர்ந்து
பற்பல பெருமை பெற்று
மிடுக்கேரிய உயரம் பெற்ற
புரட்சியின் விடியல் நில நாடே.!

வேண்டாதார் பலர் நிறைய
அழிவுகள் தினம் உறைய
வெந்தணல் திடல் மீதினில்
சூழ்ற்சிதனை எரித்த நாடே.!

உயிருக்குள் உயிராகி
அன்புடன் உனைப் போற்றி
நெஞ்சத்துள் வைத்த உனை
துரோகத்தால் நிலை இழந்த நாடே.!

போருக்குள் நீ துடித்த
வலியது கொடூரமே _ இனி
யகத்தினில் உயர் பெறுவாய்
வரையரை தடை உடைப்பாய்

போர்க் களம் ஓய்ந்த பின்பும்
போர் வீரம் ஓயவில்லை 
மீண்டுமொரு காலம் பிறக்கும் _ அது
உனக்கானதாய் வழி பிறக்கும்.

                   நன்றி 
முனைக்காடான் குபேந்திரன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.