Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

மன்னார் எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்படுமா?!

Currently online
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி கோரப்பட்டுள்ளது.

ரேடியோ கார்பன் ஆய்வுகளை மேற்கொள்வற்காக குறித்த எலும்புக் கூடுகள், புளொரிடாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்ப நீதிமன்றத்திடம் அனுமதி  கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தால் மாத்திரமே  நீதி அமைச்சின் ஊடாக இந்த எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்பி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த ஆய்வின் மூலமாக ரேடியோ கார்பன் ஆய்வுகளின் மூலம் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டவர்களின் வயதைக் கண்டுபிடிக்க முடியும்.

இங்கு 54 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் ஆண்கள் மற்றும் பெண்களின் எலும்புக் கூடுகளுடன், 05 சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

மற்றும் சில எலும்புக் கூடுகளில் கூர்மையான பொருட்களால் தாக்கப்பட்டு உடைக்கப்பட்ட சந்தேகத்துக்குரிய தடயங்கள் உள்ளன.

எனினும் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்காவிற்கு அனுப்ப அனுமதி வழங்கப்பட்டால் மாத்திரமே காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என சட்ட மருத்துவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.