Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 24, 2018

விமான சேவைகளில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க அழைப்பு!

Currently online
கடந்த 14 ஆம் திகதி ஸ்ரீ லங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஆகியவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன தலைமையில் ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிறுவனங்களின் செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் எம்.டீ.ஏ.ஹரல்ட் மற்றும் இலங்கை கணக்காய்வு மற்றும் கணக்காய்வு தர அய்வு சபையின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.ஜே.கே.கீகனகே ஆகியோர் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த ஆணைக்குழுவானது 2006 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் திகதியில் இருந்து 2018 ஜனவரி 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.