
நேரடியாக ஒளிபரப்பை 2,750 பேர் பார்த்த போதும், பொலிசுக்கு தகவல் அளிக்கவில்லை.
உத்தரபிரதேச மாநிலம், நியூ ஆக்ரா பகுதி சாந்தி நகரை சேர்ந்தவர் முன்னா குமார் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவர் இராணுவத்தில் சேர ஐந்து முறை முயற்சி செய்தார். அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால், விரக்தியடைந்த அவர், பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 1:09 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த வீடியோவை 2,750 பேர் பார்த்த போதும், இது குறித்து பொலிசையோ முன்னா குமாரின் குடும்பத்தினரையோ உஷார்படுத்தவில்லை.
தனது தற்கொலை குறித்து வாலிபர், 6 பக்க கடிதம் எழுதிவைத்துள்ளார்.அதில் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளார்.