Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் விஜயகலாவிடம் தீவிர விசாரணை !!

Currently online
சிறிலங்காவின் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினரால் ஐ.தே.கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

யூலை 2 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறுவர் மற்றும் மகளீர் விவகார முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த உரைக்கு எதிராக தென்னிலங்கையைச் சேர்ந்த ஆளும் மற்றும் எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டதை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததை அடுத்து சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியையும் இராஜினாமா செய்யும் நிலை விஜயகலா மகேஸ்வரனுக்கு நேரிட்டது.

இந் நிலையில் கொழும்பிலுள்ள திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் விஜயகலாவிடம் இன்றைய தினம் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் சுமார் மூன்று மணித்தியலாங்களுக்கு மேல் விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.