Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 08, 2018

யாழ்.ஆவா குழுவினரை இரு வாரங்களில் முழுமையாக இல்லாமல் செய்ய நடவடிக்கை!

Currently online
எதிர்வரும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை முழுமையாக இல்லாமல் செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும், விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் ஆவா குழிவினார் அதிகம் நடமாடும் இடமாக யாழ்ப்பாணம், சுன்னாகமம், மானிப்பாய் மற்றும் கோப்பாய் ஆகிய 04 பொலிஸ் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டு தேடுதலில் போலீசார்  ஈடுபட்டுள்ளனர். 
எனவே அதற்கமைய 100 பொலிஸாரை கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று கடந்த 05ஆம் திகதியில் இருந்து யாழில் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவகின்றனர்.

விசேட பொலிஸ் குழுக்கள் பிரதேசத்தின் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிலையில் ஆவா குழுவென சந்தேகிக்கின்றவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடு மற்றும் மக்கள் வாழ்கைக்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.