Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

தடைகள் தொடர்ந்தாலும் மரண தண்டனை உறுதி;ஜனாதிபதி தெரிவிப்பு!

Currently online
சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டே போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வளங்குவது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலமாக பொலன்னறுவை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட மருத்துவமனையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று(21.07.2018) சனிக்கிழமை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த விடயம் தொடர்பில் மேலும் குறிப்பிடும் பொழுது எந்த தடை வந்தாலும் அவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியே ஆக வேண்டுமெனவும் கூறியுள்ளார். 

மேலும் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை கூட்டமொன்று இடம்பெற உள்ளதாகவும், சட்டம், நீதித்துறை, சிறைச்சாலை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து துறையினரையும் உள்ளடக்கிய குழுவொன்றை நியமிப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

குறித்த மரணதண்டனை தீர்ப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், இவ்வாறு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு எவ்வித ஒத்துழைப்புக்களையும் வழங்குவதில்லை எனவும் ஜனாதிபதி உறுதியாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.