Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 13, 2018

வட மாகாணம் முழுவதிலும் இரு தினங்களுக்கு மின் வெட்டு !!!

Currently online
வட மாகாணம் முழுவதிலும் நாளையும் (14) நாளை மறுதினமும் (15) மின் வெட்டு அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதனால் குறித்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த மின் வெட்டு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வடக்கு மாகாணத்தில் அமுலில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 

குறித்த இரு தினங்களிலும் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே மின்வெட்டு முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. 

மேலும், மின்வெட்டை கருத்தில் கொண்டு சகல மின் பாவனையாளர்களும்  முன் ஆயுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மின் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும் இலங்கை மின்சார சபை  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.