Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 30, 2018

வியர்வைகளால் ஒரு யுகம்..............!!!!!!! வன்னியூர் கிறுக்கன்

Currently online
வெந்திடும் தணலில்
வீரியம் கொண்டெழுந்து
உருக்கிடும் துகளிலில்
உழைப்பே உயர்வென்று
நாளும் நடந்திடு மனிதா

சீறிடும் குருதியில்
சிதையாது உன் உறுதி
கந்தகப் புகையிலும்
கருகிடாது உன் வெற்றி
எழுந்து நட எரிமலை போல

நீதிக் கண் நீ தரித்து
நிமிர்ந்து செல் தீயென
நேரத்தைக் குறித்துவை
நேர்மைதனை முன்நிறுத்திவை
நீதிச் சூரியனாய் ஒளிவீசு

வியர்வைதனில் குளித்தபடி
வெய்யிலுனை வாட்டிவிட
வேதனையில் தவிக்காதே
சுடுகாலம் குறைவிதுவே
குளிர் நாட்கள் மீண்டு வர

மண்மீது பாதம்பட
கண் தீண்டி நிலம் நனைய
புதுமையது உனதாகும்
புன்னகையே வரமாகும்
பூக்கள் மணம் தினம் வீசும்

உவர் நீர் வியர்வையதில்
உரமாகும் உன் வாழ்வு
புதுயுகப் பாக்களுனை
வியந்தபடி தான் வாழ்த்தும்
செந்தமிழில் கிறுக்குகிறேன்
செழிப்புச் செடி நீங்கள்தான்

           நன்றி
வன்னியூர் கிறுக்கன்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.