Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

வட மாகாண கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

Currently online
வடக்கில் கைத்தெறி மற்றும் கைவினைப் பொருள்கள் உற்பத்தியாளர்களின் கைத்தொழில் கண்காட்சி நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக் கண்காட்சியானது யாழ்ப்பாணம் இந்தியத் தூதுவர் மற்றும் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோரால் உத்தியோக பூர்வமாக நாடா வெட்டி ஆரம்பிக்கப்பட்டது. இக் கண்காட்சியானது இன்றும் (29.08.2018) இடம்பெறுகின்றது.


குறித்த கண்காட்சியில் வடமாகாண கைப் பணியாளர்கள் மற்றும் நெசவாளர்களின் ஆக்கங்களால் உருவான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக எண்பதுக்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டடுள்ளன.

கைவினை பொருள்களுக் கிடையிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் விருதுகளும் விருந்தினர்களால் வழங்கப்பட்டதைத்த தொடர்ந்து கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் கைத்தெறி நெசவு உற்பத்திகள், களிமண் உற்பத்திகள், தும்பு ஓலை புல் சார்ந்த உற்பத்திகள், பிரம்பு முங்கில் குழாய் சார்ந்த உற்பத்திகள், உலோகக் கைப்பணிப்பொருள்கள், ஆபரணங்கள், சங்கீத உபகரணங்கள், துணிகளிலான கைப்பணிப்பொருள்கள், சிரட்டையிலான கைப்பணிப்பொருள்கள் போன்றன காணப்படுகின்றன.

அத்துடன் சிப்பியிலான கைப்பணிப்பொருள்கள், மர உற்பத்தி பொருள்கள், தோற்பொருள்கள், கல்லாலான கைப்பணிப் பொருள்கள், பாரம்பரிய கலை வரைபுகளும் சிற்பங்களும், தென்னை பனை கித்துள் சார்ந்த உற்பத்திகள், நானாவித கைப்பணிப் பொருள்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.