Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 06, 2018

யாழ். நகரில் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் !!!

Currently online
யாழ். நகரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை “தமிழ்த்தலைவி”என குறிப்பிட்டு  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

என்றும் நாம் உங்களுடன், தமிழ் பேசும் மக்கள் என பெயரிடப்பட்டு குறித்த சுவரொட்டிகள் காணப்படுகின்றன.

இந்த சுவரொட்டிகள் யாழ்ப்பாண பஸ் நிலையம், மற்றும் யாழ்ப்பாணத்தின் அனைத்து பகுதிகளிலும்  ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகளில் “சுயலாபமற்ற அரசியலில் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் அன்று உயிர் துறந்தார் மகேஸ்வரன் இன்று பதவி துறந்தார் தமிழ்த்தலைவி விஜயகலா மகேஸ்வரன்” என குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றியிருந்த நிலையில் தென்னிலங்கையில் அவருக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை விஜயகலா மகேஸ்வரன் தான் அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்வதாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் தனது இராஜினாமா கடிதத்தினை அனுப்பியிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக தமிழ்த்தலைவி என அவரை குறிப்பிட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.