Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 18, 2018

பெண் ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி தகாத முறையில் நடத்திய குடும்பஸ்தர் கைது !!

Currently online
வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த குடும்பத்தலைவர் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த இருவரும் யாழ். சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் 22 வயதுடையவர் எனவும் கிளிநொச்சி – பரந்தனைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் மனைவி தனது கணவருடன் பெண் ஒருவர் சட்டவிரோதமாக வாழ்ந்து வருவதாக, சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டுக்கு அமையவே இவர்கள் இருவரும் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில்,
குறித்த நபர் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், தன்னை தகாத முறையில் நடத்தியதாகவும், வேறு இரு நபர்களும் தன்னை தகாத முறையில் நடத்த முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக, சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.