Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் முதல் பாடல் !! ( வீடியோ இணைப்பு )

Currently online
சாமி ஸ்கொயர் படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷின் புது மெட்ரோ ரயில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சாமி ஸ்கொயர். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் சூரி, பிரபு, ஜான் விஜய், இமான் அண்ணாச்சி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினர் உள்பட பலரும் கலந்து கொண்டு பேசினர். 

இதையடுத்து, படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. இப்படத்தில் வரும் புது மெட்ரோ ரயில் என்ற பாடலை விக்ரம் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இது கீர்த்தி சுரேஷ்க்கு முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், விக்ரம், தான் நடித்துள்ள படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்

இந்தப் பாடலின் மூலம், கீர்த்தி சுரேஷ் பின்னணிப் பாடகராக அறிமுகமாகியுள்ளார். தற்போது இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.