Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 20, 2018

ஒற்றை கண்...........!!!!!! ஆகிஷா.$

Currently online
அந்த சிறிதுநேர பேருந்து நெரிசல்களில் வந்து போன உரசல்களை கூட அந்த ஒற்றை 
கண் பார்த்திருந்தது.

கிழிந்த ஆடையோடு 
பிச்சையெடுக்கும் ஒரு 
அபலைப்பெண்ணுக்கு 
ஐஞ்சு ரூபாய் போட்ட போதும்
அந்த ஒற்றை கண் பார்த்திருந்தது.

பால்ய நண்பனோடு பழைய கால நினைவுகளை பக்கத்து தெரு பூங்காவில் பகிர்ந்து சிரித்த நேரத்திலும் அந்த ஒற்றை கண் 
ஒரு ஓரமாக பார்த்திருந்தது.

அவசரமாக வேலைமுடித்து
ஆட்டோக்கு காத்திருந்து
கால் கடுக்க அந்தி சாய 
அச்சத்துடன் வீடு வரவும் 
அந்த கண் எனக்காக காத்திருந்தது.

கணுக்கால் கரை மறைத்து
கண்டாங்கி சேலையிலே 
கட்டாந்தரை பார்த்து தான்
தலை குனிந்து போகும் போதும்
மோகத்தீயோடு அந்த ஒற்றை 
கண் கரை புரண்டிருந்தது.

திமிராக கதைத்த போதும்
தன்மானம் கொண்டுதான்
தாளாது நான் தவித்த போதும்
அந்த ஒற்றை கண் 
சருகு வேலியிடையே
என்னையே பார்த்திருந்தது

எங்கு பார்த்தாலும் அந்த 
ஒற்றை கண் என்னோடு
பயணித்தது

ஆம்...

யார் அந்த ஒற்றை கண்....

  நன்றி 
ஆகிஷா.$
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.