Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

தலாவ வங்கிக் கொள்ளையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

Currently online
அநுராதபுர தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாடியாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது அநுராதபுர மாவட்டத்திலுள்ள தலாவ பிரதேச இலங்கை வங்கி கிளையில் இருந்து 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பணமும் தங்க ஆபரணங்களும் அண்மையில் கொள்ளையிடப்பட்டது.

கொள்ளையிடப்பட்ட  ஆபரணங்களுக்கு பதிலாக அவற்றை போன்ற ஆபரணங்களைச் செய்து தருமாறு சில வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் வங்கி முகாமைத்துவம் தலைமையகத்துக்கு அறிவித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தையில் நிலவும் பவுண் பெறுமதிக்கு அமைய இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.