Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

இலங்கை மக்கள் சார்பில் இந்தியாவுக்கு நன்றிகள்;பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!

Currently online
இலங்கை வாழ் மக்கள் சார்பில் இந்தியாவுக்கு முகுந்த நன்றியைத் தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்திருந்த போது மக்களது கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு 1990 அம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து தந்தமைக்காகவே பிரதமர் இவ்வாறு  நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும் 1990 என்ற இலக்க சுவசரிய இலவச அம்புலன்ஸ் வாகன சேவையின் இரண்டாவது கட்டம் யாழ்ப்பாண மாநகர சபை மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இது தொடர்பான நிகழ்வில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட இந்திய அரசாங்கம், நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு பிரதமர் இதன் போது பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன் இலவச சுகாதார சேவையை மேலும் அர்த்தப்படுத்தும் வகையில் சுவசரிய என்ற இலவச அம்புலன்ஸ் சேவையின் மூலம் நாட்டு மக்கள் பயன் அடைவார்கள் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.
.
மேலும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் சமகாலத்தில் ஏழ்மை உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் சமூக சேவைகள் மற்றும் சுகாதார நல சேவைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. அத்துடன் யாழ்.மாவட்டத்தில் பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுகம் விஸ்தரிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவித் திட்டங்களையும் இந்திய அரசாங்கம் செய்துள்ளது.

தற்போது மலையக மக்களுக்கான வீடுகளை வழங்குவதிலும் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளும் கலாசார ரீதியாகவும், நட்பு ரீதியாகவும், எவருக்கும் அடி பணிந்தவர்கள் அல்ல. இந்த  நட்பை எவரும் குறைத்து மதிப்பீடு செய்ய இயலாது எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.

அத்துடன் சமகால நல்லாட்சி அரசாங்கம் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. நாட்டு மக்களுக்கு ஆகக் கூடுதலான வசதிகளை செய்யும் கொள்கையை நடைமுறையில் முன்னெடுத்துள்ளது. 

இதற்கமைவாக இந்த இலவச அம்புலன்ஸ் வாகன சேவை வடக்கு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதன் மூலம் அந்த மக்களின் இலவச சுகாதார தொடர்பான உரிமை உறுதி செய்யப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சுவசரிய இலவச அம்புலன்ஸ் சேவையை வடக்கில் முன்னெடுப்பதற்காக 300 அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கமைவாக 21 வாகனங்களை பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.