Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 11, 2018

இலையாள்!!! - ஈழத்தமிழன் யசி!!!

Currently online
நீ பச்சை உடுத்ததனால்- இலைகள் 
இச்சை கொள்கின்றன -இடை
மச்சம் கண்டதனால் அவை 
சர்ச்சை கொள்கின்றன

இணைபிரியா கண்களையே
இடைவிலக வைக்கிறியே
இலை விலகும் போதினில்
இன்பமொன்று கொடுக்கிறியே

கன்னக்குழி சிரிப்பால்
கட்டிப்போடுகிறாய்
நெஞ்சுக்குழி நெருப்பால
சுட்டுப்போடுகிறாய்

ஒண்ணுரெண்டு துணியால
ஒண்ணுமே தெரியேல்ல
கண்ணுரெண்டும் பாக்குது 
காரணம் புரியேல்ல

எட்டத்தில பாக்கயில
எட்டிப்பிடிக்க ஏங்குறண்டி 
கிட்டத்தில நீயும் வந்தா
கிறுக்கனாகி முழிக்கிறண்டி

கீழயிருந்து மேல பாக்க
இலை விட இல்லையடி
காத்தடிக்கும் காரணத்த
கண்டபடி தேடுறண்டி


                                                நன்றி 
                                 ஈழத்தமிழன் யசி ( முகப்புத்தகத்திலிருந்து)

jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.