Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Saturday, July 21, 2018

அண்ணனவன் அருகிருந்தால்..................!!!!(வன்னியூர் மகள்)

Currently online
அண்ணனவன் அன்புதனை
பிறப்பினிலே கொடுக்கவில்லை
சண்டையிட்டு குறும்பிடவே
என்னருகில் இருக்கவில்லை...!!!

கை பிடித்து நடை பயில
அவன் கரமோ இருந்ததில்லை
கண்ணீரைத்துடைப்பதற்கு
அவன் கரங்கள் நீளவில்லை....!!!

பள்ளியிலே தோழமைகள்
அண்ணன் கதை பேசுகையில்
தனித்திருந்து கற்பனைகள்
கண்ட நாள் பலவுண்டு...!!!

எனக்கென்று ஓர் அண்ணன்
அவனியிலே இருந்திருந்தால்
அவனே தான் உலகமென
காலடியில் சுழன்றிருப்பேன்...!!!

செல்லமாய் பல சண்டை
சிணுங்கலிலே முடிந்திருக்கும்
அட்டகாசம் போட்டாலும்
ஆழ்மனதில் பயமிருக்கும்...!!!

அவன் முகம் வாடுகையில்
என் அகமோ துடிதுடிக்கும்
அன்னையாய் நானாகி
சேயாகி அணைத்திருப்பேன்...!!!

பகல் கண்ட கனவெல்லாம்
நனவாகிப் போனதுவே
அண்னாய் அரவணைத்து
வழி நடத்த உறவுண்டு.....!!!!!



நன்றி. 
(வன்னியூர் மகள்)
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.