Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Tuesday, July 17, 2018

காதலாகிய கவிதை............!!! வன்னியூர் மகள்

Currently online
உணர்வுகளால் ஒன்றாகி
உதிரத்தால் இழையோடி
உயிருக்கு நிகராகி
உரிமையாய் ஆனாயே

உணர்வுகளால் உருக்கொடுத்து
தமிழ்த்தாயால் உனைச்செதுக்கி
மனதினிலே சுமந்து
காகிதத்தில் பிரசவித்து

கண்களுக்குள் கட்டுண்டு
கரங்களுக்குள் நீ தவழ்ந்து
மைத்துளிகள் சிந்துகையில்
கண்ணீரும் சிந்தியங்கே

இன்பமும் உனில் கலந்து
துன்பத்தை நீ போக்கி
சினங்கொண்டு சீறுகையில்
விரல் கொண்டு உனையாக்கி

என்னழகின் உயர்வதனை
எனக்கே புரியவைத்து
தாயாக எனையாக்கி
மனதெல்லாம் குளிர்வித்து

இருட்டுக்குள் இருந்தவளை
வெளிச்சதில் உலவுதற்கு
ஒளி கொடுத்த என் காதல்
என்றென்றும் நீ தானே

படிகளாய் நீ இருந்து
பார்போற்ற எனை உயர்த்தி
தாய்த்தமிழை போற்றுதற்கு
தயவாகிப் போனாயே

        நன்றி
வன்னியூர் மகள்
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.