Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 16, 2018

வீழ்வேனென்று நினைத்தாயோ..........!!!!!!! கவிப்பிரியை சுஜனி

Currently online
விழிகளும் மொழிகளும் 
---- குழியெனவாகிட 
வலிகளும் பழிகளும் 
----உளியெனப் பாடிட 
ஊற்றுற்ற தேகம்
---உயிரற்று மடிவதோ.?

வீரியமே தமிழ் 
---வீரம் கொண்டெழ 
வீசிடும் காற்றினில்
---வீரர்கள் அலையாக
வேங்கைகள் தீயிலும் 
---வேகமாய் பாய்ந்திட 
எழுந்த நம் தாகம் 
---விழுந்தே போவதா.?

செம்மழைத் தமிழ்மொழி 
---செங்கதிராகிட 
பழந்தமிழ்ச் சொற்களும் 
----துளிர் விட்டெழுந்திட 
பிறப்பது வீரம் 
---இறப்பினிலாகுமோ.?

பெண்மையின் புகழதை
----பாரதி உரைத்திட
பெருமதி மிக்கதோர்
----சரித்திரம் படைத்திட
சகதியே எனவாகி
----சாக்கடை ஆவதோ.?

எரிமலைத் துகளது
---கருகியே மறைந்திட
எழுந்தவர் பகைகள்
---அறுந்தே உறைந்திட
அன்னைத் தமிழிது
---அடங்கியே வீழ்வதோ.?

ஆயிரம் ஆண்டென
----வரலாறு கூறிட
ஆண்டவர் சுவடதை
----அந்நியர் அழித்திட
அம்மணமாகியே
---அநாதையாய் சாவதோ.?

அக்கினித் தணலை 
---வீசிய போதும் 
அணையாது அசையாது
---எம்மொழி வீரம் 
ஆணவம் கொண்டெழும்
---மடந்தைகள் உடைத்து
மீண்டும் மலரும் 
---புதியதொரு வாழ்வு..

           நன்றி 
கவிப்பிரியை சுஜனி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.