Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி !!!

Currently online
வெளிநாடுகளுக்குச் சென்றுவரும் உள்நாட்டுப் பயணிகளுக்கு கட்டு நாயக்க விமான நிலையத்தில் ஈ-கார்ட் நடைமுறையொன்று அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பயணிகளுக்கு ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்காக இந்த இ காட் முறை அமுல்படுத்தப்படவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்பொருட்டு போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் மற்றும் குடியகல்வு குடிவரவு அமைச்சின் அதிகாரிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கட்டுநாயக்க விமான சேவைகள் அதிகாரசபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“விமான நிலையத்தில் இதற்கென அமைக்கப்படும் ஈ-காட்டைப் பயன்படுத்தி விமான நிலைத்திற்குள் பிரவேசிக்க முடியும், விமான நிலையத்தில் இருந்து துரிதமாக வெளியேறவும் முடியும். உள்நாட்டு விமானப் பயணங்களை ஆரம்பிக்கத் தேவையான துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன.

நேபாளத்தைப் போன்று வளர்ச்சி கண்ட உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிப்பது இலக்காகும். இதற்கான வசதிகளும், ஒடுபாதைகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. மட்டக்களப்பு, சிகீரிய போன்ற பிரதேசங்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானசேவை ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

இதேவேளை ஈ-பாஸ்போட் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்கென விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.