Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் !!

Currently online
இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. 

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் பின்புறத்தில் பெண் ஒருவர் சுயநினைவின்றி இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

பரிசோதனையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்தது. அந்த பெண்ணிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், விருமாண்டி என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.