Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Friday, July 27, 2018

இறால் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி ??

Currently online
தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் – 2 கப் 
இறால் – 250 கிராம் (சிறியது) 
கரட் – 3
பீன்ஸ் – 10
குடமிளகாய் – 1 
வெங்காயத்தாள் – சிறிது
உப்பு – தேவையான அளவு 
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் – சிறிது

செய்முறை:

கரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள இறாலை போட்டு, 7-8 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதே வாணலியில் வெங்காயத் தாள் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய, பின் நறுக்கி வைத்துள்ள மீதமுள்ள காய்கறிகளைப் போட்டு நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து வதக்கி, வறுத்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.

கடைசியாக அதில் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி இறக்கினால், சுவையான இறால் ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.