Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Wednesday, July 25, 2018

சேமியா மட்டன் பிரியாணி செய்யலாமா ??

Currently online
தேவையான பொருட்கள் :
மட்டன் – அரை கிலோ
சேமியா – அரை கிலோ
எண்ணெய் – 100 மில்லி
நெய் – 50 மில்லி
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 மேசைக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
சில்லி பவுடர் – 1 1/2 தேக்கரண்டி (காரம் அவரவர் விருப்பம்)
தயிர் – 4 மேசைக்கரண்டி
வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி, புதினா – தலா கைப்பிடியளவு
எலுமிச்சைபழம் – பாதி
தேங்காய் பாதி – துருவிக் கொள்ளவும் (பால் எடுக்கவும்)
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்ற சேமியாவை பொன் முறுகலாக வறுத்துக் கொள்ளவும்.

மட்டனை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதனுடன் அரை தேக்கரண்டி சில்லி பவுடர், அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 2 மேசைக்கரண்டி தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் சிவந்தவுடன் மீதியுள்ள இஞ்சி பூண்டு விழுது, கரம்மசாலா தூள் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வைக்கவும்.

பின்பு கொத்தமல்லி, புதினா, ப.மிளகாய், தக்காளி, சில்லி பவுடர், உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது ஊற வைத்திருக்கும் மட்டனை அதனுடன் சேர்த்து, அரை கப் தண்ணீர் சேர்த்து பிரட்டி விட்டு குக்கரை மூடி 5 விசில் வைத்து இறக்கவும்.

சேமியா பிரியாணிக்கான மட்டன் கிரேவி ரெடியாகி விட்டது.

மட்டன் வெந்ததும் மசாலாவுடன் இருக்கும் மட்டனை அடி கனமான பாத்திரத்திற்கு மாற்றவும். ஓரளவு தண்ணீர் மட்டனில் இருக்கும்.
மீதி தண்ணீருக்கு தேங்காய்பாலுடன் தண்ணீரை சேர்த்து அளந்து வைக்கவும். (தண்ணீரின் அளவு – சேமியா ஒன்றுக்கு ஒன்றரை அளவு இருக்க வேண்டும்.)

பாதி எலுமிச்சை பழத்தை விதை நீக்கி அதில் அதில் பிழியவும். உப்பு சரிபார்க்கவும். கொதி வந்தவுடன் அதில் வறுத்து வைத்திருக்கும் சேமியாவை சேர்க்கவும். பாத்திரத்தை மூடி வைத்து 10 நிமிடம் சிம்மில் வைத்து சேமியாவை வேக விடவும்.

சேமியா வெந்ததும் சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து ஒரு முறை கிளறி விடவும்.

அடுத்து அதில் நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை தூவி அடுப்பை அணைக்கவும்.

நன்கு ஒரு சேர பிரட்டி மூடவும்.

பத்து நிமிடம் கழித்து திறந்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

சேமியா மட்டன் பிரியாணி ரெடி.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.