Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 09, 2018

அண்ணன் தம்பி உறவிது............!!!! காரை சசி

Currently online
எம்மை பெற்ற அன்னை தந்தை
எம்முடனே இல்லை - நாம்
பொம்மை போலே இருந்துமவர்
விரும்பவில்லை எம்மை

விட்டு எம்மை போனவர்கள்
இன்றும் வரவும் இல்லை - தம்
பிள்ளையென்று இருவரையும்
தொட்டுத் தூக்க-வில்லை

தொட்டிலிலே இருந்தவனை
தோளில் போட்டு வளர்த்தேன்
தூங்கியெழ என் மடியை
தாய்மடிபோல் கொடுத்தேன்

இருந்துமவன் பசியை தீர்க்க
முடியவில்லை என்னால் - அந்த
இறைவன் கூட எழுந்து இன்று
வரவுமில்லை முன்னால்...

பட்டினியால் எந்தன் தம்பி
பல தடவை அழுவான் - அவன்
பசிக்குதண்ணா என்று சொல்லி
பாச மழை பொழிவான்

அங்குமிங்கும் நானலைந்து
அவனுக்-குணவு எடுப்பேன்
பசியை போக்க பாய்ந்து வந்து
அக்கறையா கொடுப்பேன்

அவனுமதை உண்டு என்னை
அன்பு கொண்டு பார்ப்பான் - தன்
பார்வையாலே அண்ணனிவன்
பசியையும் தான் தீர்ப்பான்

அப்படித்தான் அன்று தொட்டு
இன்றுவரை ஈர்த்தான் - இந்த
அண்ணனையும் பெருமுறவாய்
இதயத்திலே சேர்த்தான்

இப்படித்தான் நாம் வளர்ந்தோம்
இன்றுவரை மெய்யா - நாம்
இவ்வுலகில் இருந்ததில்லை
இருவருமே பொய்யா
இது சத்தியமா தாய்யா....

நன்றி
காரை சசி
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.