Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 29, 2018

லீ சோங்கிற்கு தைவானில் சிகிச்சை;அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Currently online
மலேசியாவின் பேட்மிண்டன் சூப்பர் ஸ்டாரான டத்தோ லீ சோங் வெய் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனை காரணமாக தைவானில் சிகிச்சை பெறச் செல்லும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியுடனும் வருத்தத்துடனும் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர்.

மூத்த வீரரான லீ சோங் வெய்(35) பேட்மிண்டன் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தவல்கள் வெளியாகியுள்ளமையே மலேசிய பேட்மிண்டன் ரசிகர்களுக்கு கடும் அதிர்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு தான் பிரசித்தி பெற்ற இந்தோனிசிய பொதுப் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை லீ சோங் வெய் வாகை சூடினார்.

சீனாவில் நடைபெறும் உலகச் சாம்பியன் போட்டிக்கும் ஆசியா விளையாட்டுப் போட்டிக்கும் தயாராகி வந்த வேளையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த லீசோங் வெய் தற்போது சிகிச்சைக்காக தைவான் செல்கிறார். 

இந்தச் சிகிச்சை சற்று நீண்ட கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதால் லீ சோங் வெய் மீண்டும் பேட்மிண்டன் களத்திற்குத் திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.