Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Sunday, July 22, 2018

பலாமுசு குருமா செய்யலாம் வாங்க!!!

Currently online
தேவையான பொருட்கள்:

01) சிறிய பலாக்காய் –  02.
02) முந்திரிப் பருப்பு – 15.
03) சோம்பு – 2 ஸ்பூன்.
04) வெங்காயம் –  03.
05) தக்காளி –  03.
06) ஏலக்காய் - 02 ஸ்பூன்.
07) கிராம்பு –  02 ஸ்பூன்.
08) எண்ணெய் – தேவையான அளவு.
09) பட்டை – 01 துண்டு.
10) உப்பு – தேவையான அளவு.
11) இஞ்சி பூண்டு – பேஸ்ட்.
12) மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்.
13) மல்லி தூள் - 03 ஸ்பூன்.
14) சீரகம் –  02 ஸ்பூன்.
15) மிளகாய்தூள் -  03 ஸ்பூன்.
16) தேங்காய் –  அரை மூடி.
17) கரம்மசாலா தூள் -  அரை ஸ்பூன்.


 செய்முறை :

முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். பின்னர் தக்காளியையும், வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.

கையில் எண்ணெயை தடவி கொண்டு பலாக்காயின் தோலைச் சீவி, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூளும், உப்பும் சேர்த்து, அரை வேக்கடாக வேக வைத்துக் கொண்டு, தண்ணீரை வடிகட்டி விடுங்கள்.


கடாயில் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, கசகசா, முந்திரி பருப்பு ஆகிய பொருள்களைப் போட்டு வதக்குங்கள்.அத்துடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கி, ஆற வைத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.


பின்பு மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு போட்டுத் தாளித்துக் கொண்டு, தக்காளி, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லி தூள், மிளகாய்தூள், கரம் மசாலா போட்டு நன்கு வதக்கி விடவும்.

பின்னர் அந்த கலவையில் வேக வைத்திருக்கும் பலாக்காய், அரைத்த மசாலாவைச் சேர்த்துக் கிளறி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்புப் போட்டுக் கொதிக்க வைக்கவும். பரிமாறவும்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.