
இணையாய் ஒருத்தி முட்டி மோதி..
உனக்குள் மூழ்கி எழத்துடிக்கிறாள்...
அவளைப் பார்த்ததும் நீ - கண்டும்
காணாது போலிரு..!
உன்னைத் தோற்கடிக்க இயலாதெனும்
ஆணவத்தில் நீ இருக்கையிலே..
உனக்கு நிகரான போர்வையிலே... அழகிலும் ஆற்றலிலும் அழுகையிலும்...
மேலோங்கியே செல்லுமவளைப்பாராயோ...!
இரும்பான என் நெஞ்சம் இவளால் இளகி உருகும் ஈயத்தைப்போலாகி இருக்குதடி..!
மென்மைத்தேகத்திற்கு மெய்மயக்கும் சக்தியுண்டா..!
உண்மை மறைக்க உடலுக்குள் இடமுண்டா..!
நன்றி
வன்னியூர் சுகிர்
கிளிநொச்சி