Top Social Icons

Left Sidebar
Left Sidebar
Featured News
Right Sidebar
Right Sidebar

Gift2Sri

suj

Monday, July 23, 2018

குடும்ப தகராறு ; ஹெல்மெட்டால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவர் !!

Currently online
ஹெல்மெட்டால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சுதாகர் (43). இவர், திருவொற்றியூர், விம்கோ நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் பணிபுரிகிறார்.

இவருக்கும் ஆந்திர மாநிலம், ராசப்பள்ளியைச் சேர்ந்த விமலா(32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு சுதாகர் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியிலிருந்து சுதாகர், விமலா இருவரும் ஒரே வீட்டில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் சுதாகர், மாதந்தோறும் மனைவி விமலாவுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுதாகருக்கும், விமலாவுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் மது போதையில் இருந்த சுதாகர், ஹெல்மெட்டால் மனைவி விமலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த விமலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மற்றும் பாதிரிவேடு போலீஸார் விரைந்து சென்று விமலாவின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், சுதாகரை கைது செய்துள்ளனர்.
jj

Responsive Full Width Ad


Copyright © 2016 Yarlitrnews, powered by Suj.